Home நாடு இந்து மதத்தை இழிவுபடுத்திய முகமட் சாம்ரி வினோத் கைது

இந்து மதத்தை இழிவுபடுத்திய முகமட் சாம்ரி வினோத் கைது

1157
0
SHARE
Ad

கங்கார் – இந்து மதத்தை இழிவுபடுத்தி காணொளி வெளியிட்டவரும், சர்ச்சைக்குரிய மத போதகர் சாகிர் நாயக்கின் சகாக்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான, 34 வயது முகமட் சாம்ரி வினோத் இன்று பெர்லிஸ் மாநிலத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது ஏராளமான புகார்கள் நாடு முழுமையிலும் உள்ள காவல் நிலையங்களில் அண்மைய சில நாட்களாகச் செய்யப்பட்டு வந்த நிலையில் அவர் காவல் துறையின் கடுமையான குற்றங்களுக்கான டி-9 (D9) பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

இந்து மதத்திலிருந்து முஸ்லீம் மதத்துக்கு மாறியவரான அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப் படுத்திய பெர்லிஸ் மாநில காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் (சீனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர்) டத்தோ நூர் முஷார் முகமட், ஒற்றுமையைக் குலைப்பது, மக்களிடையே இன விரோதத்தைத் தோற்றுவித்தது, ஆகிய குற்றங்களுக்காகவும், பல்ஊடக தொடர்பு சட்டத்தின் அடிப்படையிலும் அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

#TamilSchoolmychoice

முகமட் சாம்ரி வினோத் மீது ஏற்கனவே ஒரு குற்றவியல் குற்றச்சாட்டு இருப்பதையும் கூறிய டத்தோ நூர் முஷார் முகமட் தாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.