Home நாடு “சுற்றி இருந்தவர்கள் சொன்னதைக் கேட்டு, நானும் அப்படியே சொன்னேன்!”- அஸ்வாண்டின்

“சுற்றி இருந்தவர்கள் சொன்னதைக் கேட்டு, நானும் அப்படியே சொன்னேன்!”- அஸ்வாண்டின்

983
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தியை தாம் அவமதிக்கவில்லை என ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜெஎம்எம்) அமைப்பின் தலைவர் அஸ்வாண்டின் ஹாம்சா கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த பேரணியில் தம்மைச் சுற்றியிருந்தவர்களின் தூண்டுதலினால்தான் தாம் அவமதிக்கதக்க அந்த வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் கூறினார். அன்றைய தினம் அங்கு கூடி இருந்தவர்கள் என்ன சொன்னார்களோ அதனை செவிமடுத்து, பின்பு நான் பேசினேன் என அஸ்வாண்டின் கூறினார்.

இதற்கிடையே, முன்னதாக அஸ்வாண்டின் ஹம்சா மீது அவதூறு வழக்கொன்றை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடுத்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பேரணி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அஸ்வாண்டின், தம்மை இழிவுப்படுத்திப் பேசியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

பேரணியின் போது உரையாற்றிய அஸ்வாண்டின், தம்மை வேண்டுமென்றே அவதூறு சொற்களைப் பயன்படுத்தி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அளவிற்குப் பேசியதாக குறிப்பிட்டிருந்தார்அந்த பேரணியின் போது பேசிய அஸ்வாண்டின், அமைச்சர் வேதமூர்த்தியை தகாத வார்த்தைகளாலும், சான்றுகளற்ற அவதூறுகளை அவர் மீது வைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.