Home நாடு எம்ஏசிசி: 270 மில்லியன் 1எம்டிபி பணத்தை பறிமுதல் செய்ய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

எம்ஏசிசி: 270 மில்லியன் 1எம்டிபி பணத்தை பறிமுதல் செய்ய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

707
0
SHARE
Ad

புத்ராஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கணக்கிலிருந்து  41 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை பறிமுதல் செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அதன் தலைவர் லத்தீஃபா கோயா கூறினார்.

நஜிப்பின் கணக்கிற்கும் பின்னர் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சுமார் 270 மில்லியன் 1எம்டிபி பணம் மாற்றப்பட்டதை மீட்டெடுக்க, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 56-இன் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இன்று வெள்ளிக்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், அம்னோ பிரிவுகள் மற்றும் கிளைகள் மட்டும் 212 மில்லியனைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

1எம்டிபி ஊழலில் இருந்து எம்ஏசிசி இன்றுவரையிலும் 919 மில்லியனை மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.