Home One Line P2 இன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரசிகர்களைக் கிறங்கடிக்கத் தயாராகும் “மாஸ்டர்” மாளவிகா மோகனன்

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரசிகர்களைக் கிறங்கடிக்கத் தயாராகும் “மாஸ்டர்” மாளவிகா மோகனன்

1264
0
SHARE
Ad

சென்னை – நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் “மாஸ்டர்”. விஜய், இன்னொரு பிரபல நடிகர் விஜய் சேதுபதியோடு இணைகிறார் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.

ஆனால் சில இரசிகர்கள் இந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது வேறொரு காரணத்திற்காக! மாஸ்டர் படத்தின் கதாநாயகி என அறிவிக்கப்பட்டிருப்பவர் மாளவிகா மோகனன். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். மற்ற மொழிப் படங்களில் ஏற்கனவே பிரபலமாகியிருப்பதோடு, “மாடலிங்” எனப்படும் விளம்பர அழகியாகவும் புகழ் பெற்றிருப்பவர்.

மாளவிகா மோகனனின் முதல் படம் எப்படியிருக்கும், அதில் அவர் எப்படிக் காட்சியளிப்பார் என இரசிகர்கள் கற்பனையில் மிதந்து கொண்டிருக்க, அதற்கு இடம் கொடுக்காமல் இரசிகர்களைத் திருப்திப்படுத்த மாளவிகா தேர்ந்தெடுத்த களம் “இன்ஸ்டாகிராம்”.

#TamilSchoolmychoice

தனது விதம் விதமான கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இடைவிடாது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதுதான் மாளவிகாவின் வழக்கம். அதன் மூலம் தனது அழகிய, கவர்ச்சியானத் தோற்றத்தை இரசிகர்களுக்குத் தொடர்ந்து விருந்தாக்கி வருகிறார் மாளவிகா.

இதன் காரணமாகவும் மாளவிகாவுக்காக “மாஸ்டர்” படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது.

மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் கண்டிருக்கும் படங்களில் சில உங்களின் பார்வைக்கு :-