Home One Line P1 சிலிம் இடைத் தேர்தல் : அம்னோ வேட்பாளர் முன்னணி வகிக்கிறார்

சிலிம் இடைத் தேர்தல் : அம்னோ வேட்பாளர் முன்னணி வகிக்கிறார்

930
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம்: மிகவும் பரபரப்புடன் இன்று நடைபெற்று முடிந்த பேராக் மாநிலத்தின் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில்  முதல்கட்ட வாக்கெடுப்பு ஒப்பீடுகளின்படி தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளரான முகமட் சைடி அசிஸ் முன்னணி வகிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8.00 மணிக்கு சுறுசுறுப்பாகத் தொடங்கி மாலை 5.00 மணி அளவில் நிறைவு பெற்றது.

மொத்தம் 22,749 பதிவு பெற்ற வாக்காளர்களை சிலிம் சட்டமன்றம் கொண்டுள்ளது. இவர்களில் சுமார் 85 விழுக்காட்டினர் இன்று வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கணித்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்றைய வாக்களிப்புக்காக 12 வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

22,749 பதிவு பெற்ற வாக்காளர்களைத் தவிர்த்து கூடுதலாக 267 முன்கூட்டிய வாக்காளர்களும் 78 அஞ்சல்வழி வாக்காளர்களும் இந்தத் தொகுதியில் பதிந்து கொண்டுள்ளனர்.

முன்கூட்டிய வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு கடந்த  செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெற்றது.

மும்முனைப் போட்டி

தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சிலிம் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில், தேசிய கூட்டணி மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களுக்கு இடையிலான மூன்று முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.

தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து அம்னோ தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் முகமட்சைடி அசிஸ், 43, சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் அமீர் குசைரி முகமட் தனுசி, 38, மற்றும் கல்வியாளர் டாக்டர் எஸ்.சந்தரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் புதிய கட்சி இன்னும் பதிவு செய்யப்படாததால், அந்தக் கட்சியின் வேட்பாளரான குசைரி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

நான்கு தவணை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ குசைரி அப்துல் தாலிப் (59) ஜூலை 15-ஆம் தேதி மாரடைப்பால்  காலமானதை அடுத்து சிலிம் சட்டமன்றம் காலியானது.