Home One Line P2 பிரிட்டன் – ஜப்பான் இடையிலான வாணிப உடன்பாடு

பிரிட்டன் – ஜப்பான் இடையிலான வாணிப உடன்பாடு

593
0
SHARE
Ad

இலண்டன் : ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் தனது முதல் அயல்நாட்டு வாணிப ஒப்பந்தத்தை பிரிட்டன் ஜப்பானுடன் கையெழுத்திட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் வரலாற்று பூர்வ முடிவை பிரிட்டன் எடுத்தது.

அதைத் தொடர்ந்து பல அயல்நாடுகளுடன் வாணிப ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் முயற்சியில் பிரிட்டன் ஈடுபட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஜப்பானுடனான புதிய ஒப்பந்தத்தின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான வாணிபத்தின் மதிப்பு 19.5 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும்.

அதே வேளையில் பிரிட்டனிலிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் 99 விழுக்காடு பொருட்களுக்கு வரிவிதிப்பு இருக்காது.

ஜப்பானுடனான ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் பிரிட்டன் மேற்கொண்டிருக்கும் மிக வெற்றிகரமான வாணிப உடன்பாடு என அனைத்துலக வாணிப அமைச்சர் லிஸ் டிரஸ் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பலன்களை இனி பிரிட்டன் தொடர்ந்து பெற முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி விட்டாலும் இந்த ஆண்டு இறுதிவரை அந்த ஒப்பந்தங்கள் நீடிக்கும். அதற்குள்ளாக பிரிட்டன் தனக்கென சொந்த தனி வாணிப ஒப்பந்தங்களை சம்பந்தபட்ட நாடுகளுடன் செய்து கொள்ள வேண்டும்.

இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வாணிப ஒப்பந்தங்களைப் போன்று புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள பிரிட்டன் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது.

2018-ஆம் ஆண்டில் பிரிட்டன், ஜப்பான் இடையிலான வாணிபப் பரிமாற்றங்களின் மதிப்பு 37.2 பில்லியன் டாலராக இருந்தது.

இதன் மூலம் பிரிட்டனின் 11-வது மிகப் பெரிய வாணிபப் பங்காளியாக ஜப்பான் திகழ்ந்தது.