Home One Line P1 அம்னோ பொதுத் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்

அம்னோ பொதுத் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்

460
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செவ்வாயன்று மாமன்னரைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கும் போது, ​​ அம்னோ மூத்த தலைவர் தனது கட்சியை பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அன்வாரின் திட்டத்தை பொருட்படுத்தாமல், 15- வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற “நாங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்று பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் கூறினார்.

சில அம்னோ உறுப்பினர்கள் அன்வாரை ஆதரித்தார்கள் என்ற ஊகங்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

செப்டம்பர் 23 அன்று அன்வார் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க, பெரும்பான்மை மலாய் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றதாகக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவளிப்பதை அம்னோவால் தடுக்க முடியாது என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி அண்மையில் கூறியிருந்தார்.

உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒரு வெற்றிகரமான திட்டத்தைக் கொண்டு வர ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, அம்னோவால் வெல்ல முடியும் என்று தாஜுடின் கூறினார்.

இதனிடையே, வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி அன்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மாமன்னர் அல்-சுல்தான்  அப்துல்லா ரியாத்துடினை சந்திக்க இருப்பதாக நேற்று தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.