Home நாடு கணபதி மரணம்: காவல் துறை தலைவர், உள்துறை அமைச்சரை சந்திப்பேன்!

கணபதி மரணம்: காவல் துறை தலைவர், உள்துறை அமைச்சரை சந்திப்பேன்!

789
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல் துறை தடுப்புக் காவலில் இருந்தபோது, தாக்கப்பட்டு காலமானதாகக் கூறப்படும் ஏ.கணபதி வழக்கு தொடர்பாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மற்றும் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் ஆகியோரைத் தொடர்புகொள்ள இருப்பதாக மனிதவளத் துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்தார்.

“இந்த வழக்கின் வளர்ச்சியைப் பெற நான் காவல் துறைத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரைத் தொடர்புகொள்வேன். இந்த விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்திலும் எழுப்பப்படும்.  வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, காவல் துறையின் நேர்மை குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை குறைக்கக்கூடும்.

“இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையானது என்பதை உறுதிப்படுத்த காவல் துறைக்கு  பொறுப்பு உள்ளது. மேலும் பொதுமக்கள் அவநம்பிக்கையைத் தவிர்க்க உடனடியாக அதை மேற்கொள்ள வேண்டும்,” என்று மஇகா துணைத் தலைவருமான அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.