Home நாடு இரு ஆடவர்களைத் தாக்கும் காணொலி தொடர்பாக காவல் துறை விசாரிக்கும்

இரு ஆடவர்களைத் தாக்கும் காணொலி தொடர்பாக காவல் துறை விசாரிக்கும்

966
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் சோவ் கிட் என நம்பப்படும் இடத்தில் இரண்டு ஆண்களை தாக்கும் காணொலி பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, அக்காணொலியில் உள்ள நபர்களைக் கண்டுபிடித்து சாட்சியமளிக்க காவல் துறை அழைக்கும்.

54 விநாடி காணொலியில் இரண்டு ஆண்கள் இரப்பர் குழாயால் தாக்கி, இரண்டு பேரை உதைப்பதை காட்டுவதாக டாங் வாங்கி காவல் துறைத் தலைவர் முகமட் சைனால் அப்துல்லா தெரிவித்தார்.

“காணொலியில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் கண்காணிக்கப்பட்டு சாட்சியமளிக்க அழைக்கப்படுவார்கள். காயம் ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும், ”என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, இந்த காணொலி ஏ.கணபதி சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. பின்பு, காவல் துறை அதனை மறுத்திருந்தது.