Home நாடு கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டைக்காக்க ஒற்றுமை அரசாங்கம் அவசியம் – வேதமூர்த்தி வலியுறுத்து

கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டைக்காக்க ஒற்றுமை அரசாங்கம் அவசியம் – வேதமூர்த்தி வலியுறுத்து

895
0
SHARE
Ad

கோலாலம்பூர்- கோவிட்-19இன் தாக்கமும் பாதிப்பும் அதிகமாக இருப்பதால் மக்களின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப நாட்டில் கட்சிகளைக் கடந்த ஒற்றுமை அரசாங்கம் அவசியம் அமைய வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்.ஏ.பி.) தலைவர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் தங்களின் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கோவிட்-19 உயிர்க்கொல்லி கிருமிக்கு எதிரான நடவடிக்கை ஓர் எதிரி நாட்டுடன் போரிடுவதைப் போல இருப்பதால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமுகமாக செயல்பட வேண்டிய தருணம் இது.

அரசியல் தலைவர்கள், மருத்துவ வல்லுநர்கள், நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நம் தேசத்தையும் மக்களையும் நேசிக்க வேண்டிய இந்த நெருக்கடியான நேரத்தில் அரசியலுக்கு இடமளித்து காலத்தை விரயமாக்கிவிடக் கூடாது

#TamilSchoolmychoice

மக்களின் நலம் கருதி அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதற்காக பிரதமர் இயங்கலை மூலம் ஒரு கூட்டத்திற்கு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எம்.ஏ.பி. கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதுடன் நாட்டில் ஒற்றுமை அரசு அமைக்கப்பட்டவுடன் அவசரகால சட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்வதற்கும் வழிகாண வேண்டும் என்று ஒற்றுமைத் துறையின் முன்னாள் அமைச்சருமான செனட்டர் பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.