கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 11 ) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,849-ஆக பதிவாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 646,411- ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் பதிவான 6,849 தொற்று சம்பவங்களில் 6,845 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 4 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7,749 -ஆக பயிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 563,779-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 78,864 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 912 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 458 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 84-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 3,768-ஆக உயர்ந்திருக்கிறது.
மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 2,558 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அதனை அடுத்து கோலாலம்பூரில் 884 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சரவாக்கில் 699 சம்பவங்கள் பதிவாகிய நிலையில், நெகிரி செம்பிலானில் 685 தொற்றுகள் பதிவாயின.