Home நாடு கொவிட்-19; புதிய கொவிட் தொற்று மரணம் 199 – இதுவே இதுவரையில் மிக அதிகம்!

கொவிட்-19; புதிய கொவிட் தொற்று மரணம் 199 – இதுவே இதுவரையில் மிக அதிகம்!

2763
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் தொற்றுகளின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 199 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்தது. கொவிட் தொற்று தொடங்கிய காலத்திலிருந்து மிக அதிகமான மரணங்கள் இப்போதுதான்  கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியிருக்கிறது. இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 7,440 ஆக உயர்ந்திருக்கிறது

இன்று புதன்கிழமை ஜூலை 21 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 11,985 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் கெடா மாநிலத்தில் மட்டும் 800 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

நாடு முழுவதிலும் கொவிட் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 137 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இதனால் மரண எண்ணிக்கை அதிக அளவில் தொடரலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

#TamilSchoolmychoice

கொவிட் 19 தொற்றுகளின் ஒருநாள் புள்ளி விவரங்களைக் கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்:

மாநிலம் வாரியான தொற்றுகளின் எண்ணிக்கையை கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்: