Home நாடு சைட் சாதிக் வழக்கு நிதி – 24 மணி நேரத்தில் 700,000 திரண்டது

சைட் சாதிக் வழக்கு நிதி – 24 மணி நேரத்தில் 700,000 திரண்டது

838
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியின் நிதியை முறைகேடாகக் கையாண்டக் காரணத்திற்காக முன்னாள் அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தனது வழக்கிற்காக பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் திரட்டப் போவதாக அவர் அறிவித்தார்.

அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து சைட் சாதிக் 700 ஆயிரம் ரிங்கிட்டைத் திரட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பொதுமக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுவதாக அமைந்திருக்கிறது.

“எனது வாழ்க்கையையே நான் மலேசியாவுக்காக அர்ப்பணிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இதற்காக நான் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன். அனைத்து மலேசியர்களுக்குமான நாடாக மலேசியாவை உருவாக்க நான் சளைக்காமல் தொடர்ந்து பாடுபடுவேன். இதுதான் எனது வீடு என அனைத்து மலேசியர்களும் பெருமைப்படும் வண்ணம் நாட்டை மாற்றுவோம்” என சைட் சாதிக் கூறியிருக்கிறார்.

பெர்சாத்து கட்சி நிதியை முறைகேடாகக் கையாண்டதற்காக சைட் சாதிக் மீது 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. 330 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகை அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 80 ஆயிரம் ரிங்கிட்டை அவர் நீதிமன்றத்தில் செலுத்தினார்.

எஞ்சிய 250 ஆயிரம் ரிங்கிட்டை அவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜூலை 27-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் தனது வழக்கிற்கான செலவினங்களுக்காகவும் சைட் சாதிக் பொதுமக்களின் நன்கொடைகளை நாடுவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்தே அவருக்கு ஆதரவாக 700 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் பொதுமக்களால் வழங்கப்பட்டிருக்கிறது.