Home நாடு ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியப் பெண்கள் குழு தோல்வி

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியப் பெண்கள் குழு தோல்வி

640
0
SHARE
Ad

தோக்கியோ : ஒலிம்பிக்சில் அரை இறுதி ஆட்டம் வரை வந்து கவனத்தை ஈர்த்த இந்தியாவின் பெண்கள் ஹாக்கிக் குழு இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனிடம் தோல்வியடைந்தது.

மிகச் சிறப்பான முறையில் பெண்கள் குழு விளையாடினாலும் இறுதியில் 4-3 கோல் எண்ணிக்கையில் இந்தியக் குழு பிரிட்டனிடம் தோல்வியைத் தழுவியது.

எனினும் பெண்கள் ஹாக்கிக் குழுவின் ஒலிம்பிக்ஸ் பங்கெடுப்பும், அவர்களின் தொடர் வெற்றிகளும், அரை இறுதிப் போட்டிகள் வரை அவர்கள் முன்னேறியதும் இந்தியாவில் பலத்த விவாதங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தியாவில் எப்போதும் கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் போக்கு மாறவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பூப்பந்து போட்டியில் ஒலிம்பிக்சிலும் அனைத்துலக அளவிலும் பி.வி.சிந்து அடைந்திருக்கும் வெற்றிகள், இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

பூப்பந்து போட்டியில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஆண்கள் ஹாக்கிக் குழுவும் வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டது.

பளு தூக்கும் போட்டியிலும் இந்தியப் பெண் மீரா பாய் சானு இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

இப்படியாக இந்த முறை ஒலிம்பிக்சில் இந்தியப் பெண் விளையாட்டாளர்களின் பங்கெடுப்பும் வெற்றியும் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது.