Home நாடு 2 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான சலுகைகள் என்ன?

2 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான சலுகைகள் என்ன?

1438
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : கொவிட்-19 தொற்றுக்கான 2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கான சலுகைகளை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று அறிவித்தார். அவர் அறிவித்த முதற்கட்ட சலுகைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 10 முதல் அமுலுக்கு வருகின்றன.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் தொலைக்காட்சி வழி பிரதமர் மொகிதின் யாசின் இந்த சலுகைகளை அறிவித்தார். அவற்றின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பும் மலேசியர்கள், மலேசியாவில் நிரந்தரமாகத் தங்கும் வசிப்பிடத் தகுதிகள் பெற்றவர்கள் இனி நாடு திரும்பியதும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
  • பள்ளிவாசல்கள், முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
  • உணவகங்களில் சென்று உணவருந்தலாம். ஆனால் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். உணவு உண்ணும் போது மட்டும் முகக் கவசத்தை அகற்றிக் கொள்ளலாம். உணவகங்களில் நுழையும்போது 2 தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டதை உறுதிப்படுத்தும் மின்னியல் சான்றிதழைக் காட்ட வேண்டும்.
  • இதைத் தொடர்ந்து உணவகங்களுக்கும் உள்ளேயே அமர்ந்து உணவு உண்ணும் சலுகைகள் வழங்கப்பட்டாலும் உணவக உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு நிபந்தனைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • மாநிலங்களை விட்டு செல்வதற்கும் மற்ற மாநிலங்களில் உள்ள 18 வயதுக்கும் குறைவான குழந்தைகளைச் சந்திக்கச் செல்வதற்கும் அனுமதி உண்டு.
  • வெளியிடங்களில் உடற்பயிற்சிகள் செய்வது, மெதுவோட்டம் போன்றவற்றுக்கும் அனுமதி உண்டு.

(மேலும் விவரங்கள் தொடரும்)