Home நாடு கொவிட்-19; புதிய தொற்றுகள் 22,262 – மரணங்கள் 223

கொவிட்-19; புதிய தொற்றுகள் 22,262 – மரணங்கள் 223

3242
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஆகஸ்ட் 21 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 22,262 ஆகப் பதிவாகியது.  இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,535,286 ஆக உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கூடுதலாக கவலை தரும் விதத்தில் இருந்து வருகிறது.

இன்று வரையிலான ஒருநாள் மரண எண்ணிக்கை 223 ஆகப் பதிவாகியது எனவும் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 13,936 ஆக உயர்ந்திருக்கிறது.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் புள்ளிவிவரங்களை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,035 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியிலான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூர் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தது.

கோலாலம்பூர், பினாங்கு, கெடா, ஜோகூர், கிளந்தான், சரவாக் ஆகிய 5 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.

சபா 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்த்து.