Home நாடு துங்கு ரசாலி ஹம்சா, அம்னோ ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார்

துங்கு ரசாலி ஹம்சா, அம்னோ ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார்

649
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோவின் மூத்த தலைவரும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா, அம்னோவின் ஆலோசகர் குழுவுக்கானத் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அம்னோ தேசியத் தலைவர் சாஹிட் ஹாமிடிக்கு தனது பதவி விலகல் கடிதத்தை துங்கு ரசாலி அனுப்பி வைத்திருக்கிறார். அம்னோ அடிமட்ட உறுப்பினர்களிடையேயும், பொதுமக்களிடத்திலும், புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு மீது எழுந்திருக்கும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் தனது பதவி விலகலுக்கான காரணங்களாக துங்கு ரசாலி குறிப்பிட்டிருக்கிறார்.

“தோல்வியடைந்த அரசாங்கம்” எனப் பெயர் குறிப்பிடப்பட்ட முந்தைய (மொகிதின் யாசின்) அரசாங்கத்தின் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அம்னோ ஆசிகளோடு ஆதரவு வழங்கியிருக்கிறது என்ற குறைபாட்டையும் துங்கு ரசாலி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“இவர்களைக் கொண்டு அம்னோ தனது கடந்த காலத் தோல்விகளில் இருந்து மீண்டு வர முடியுமா? 15-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? இவர்களையெல்லாம் நம்பி நாம் 15-வது பொதுத் தேர்தலில் களிமிறங்க முடியுமா?” என அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்திருக்கிறார் துங்கு ரசாலி.