Home நாடு நஜிப், வேட்டி, ஜிப்பா உடையணிந்து பத்துமலைக்கு வருகை

நஜிப், வேட்டி, ஜிப்பா உடையணிந்து பத்துமலைக்கு வருகை

837
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த சில ஆண்டுகளாக தவறாமல் தைப்பூசத் தினத்தன்று, பத்துமலைக்கு வருகை தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்.

பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவர் இந்த வழக்கத்தைத் தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பிரதமராக இல்லாத காலகட்டங்களிலும் அவர் தொடர்ந்து ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளுக்கு பத்துமலைக்கு வருகை தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை பத்துமலைக்கு வருகை தந்த அவரை ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா, அறங்காவலர்களில் ஒருவரான டத்தோ ந.சிவகுமார், மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.

#TamilSchoolmychoice

பத்துமலை வருகைக்குப் பின்னர் நஜிப் அங்கிருந்த கடைகளுக்கும் வருகை தந்து, கடைக்காரர்களுடன் அளவளாவியதோடு, சில உணவுப் பொருட்களையும் வாங்கினார்.

நஜிப் பத்துமலைக்கு வரும்போதெல்லாம் ஜிப்பா அணிந்து வருவது வழக்கம். ஆனால் இந்தமுறை அவர் வித்தியாசமாக வேட்டியணிந்து ஜிப்பாவுடன் வந்தது அனைவரையும் கவர்ந்தது.

மலாய் தலைவர்களில் முதன் முறையான வேட்டியணிந்து ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்ற பெருமையையும் நஜிப் இதன் மூலம் பெறுகிறார்.