Home உலகம் உக்ரேனில் ரஷிய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் – ஐநா தீர்மானம் -141 நாடுகள் ஆதரவு

உக்ரேனில் ரஷிய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் – ஐநா தீர்மானம் -141 நாடுகள் ஆதரவு

688
0
SHARE
Ad

நியூயார்க் : நேற்று புதன்கிழமை (மார்ச் 2) ஐக்கிய நாடுகள் மன்றம் (ஐநா), சிறப்பு பொதுப் பேரவையைக் கூட்டி உக்ரேன் மீது ரஷியா மேற்கொண்டிருக்கும் ஆக்கிரமைப்பைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் உக்ரேனிலிருந்து ரஷியா உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

இதுபோன்ற தீர்மானங்களை வெகு அபூர்வமாகவே 193 நாடுகளைச் சேர்ந்த ஐநா மன்றம் நிறைவேற்றும். நேற்றைய தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 35 நாடுகள் நடுநிலை வகித்தன.

#TamilSchoolmychoice

நடுநிலை வகித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த ஒருவாரத்தில் 3-வது முறையாக ஜநா தீர்மானங்களில் நடுநிலை வகிக்கும் முடிவை இந்தியா மீண்டும் எடுத்திருக்கிறது.