Home 13வது பொதுத் தேர்தல் சபாவில் 11 நாடாளுமன்ற தொகுதிகளை பிகேஆர் வெல்வது உறுதி – சபா மாநில ஜ.செ.க தலைவர்...

சபாவில் 11 நாடாளுமன்ற தொகுதிகளை பிகேஆர் வெல்வது உறுதி – சபா மாநில ஜ.செ.க தலைவர் ஜிம்மி வோங்

445
0
SHARE
Ad

c8a453fc7adbaccd7ad45188c42d0906சபா, ஏப்ரல் 24 – சபாவில் பல்முனைப்போட்டி நிகழ்ந்தாலும் குறைந்தபட்சம் 11 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்லமுடியும் என்று சபா மாநில பிகேஆர் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

சபா மாநில ஜ.செ.க தலைவர் ஜிம்மி வோங் கூறுகையில், “ பிகேஆர் கோத்தாகினபாலு, துவாரான் மற்றும் பியோஃபோர்ட் ஆகிய தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

துவாரான் மற்றும் பியோஃபோர்ட் ஆகிய தொகுதிகள் தேசிய முன்னணி வேட்பாளர்களால் வெல்லப்பட்டு பின்பு அவர்கள் பிகேஆருடன் தங்களை இணைத்துக்கொண்டனர்.

பிகேஆர் வெல்வதற்கு  இலக்கு வைத்துள்ள மற்ற 8 தொகுதிகள் சண்டகான், புத்தாத்தான், செப்பாங்கார், தாவாவ், கோத்தா மருடு, தெனோம், கெனிங்காவ் மற்றும் பெனம்பாங் ஆகும்.

மேலும் இது பற்றி ஜ.செ.க பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில்,

“இந்த கூட்டணியின் வியூகம், 10 அதிகப்படியான தொகுதிகளை முறையே சபா, சரவாக் மற்றும் ஜொகூரில் வென்று ஆட்சியைப்பிடிப்பது” என்று இன்று கோத்தா கினபாலு ஜ.செ.க தலைமையகத்தில் தெரிவித்தார்.

மேலும் பல்முனைப்போட்டி காணப்பட்டாலும் உண்மையான போட்டி தேசிய முன்னணிக்கும் பிகேஆருக்கும் இடையே தான் என்று கூறிய அவர், 15 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், வாக்காளர்கள்  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு வெவ்வேறு விதமாக வாக்களித்தாலும் தங்களால் 20 சட்டமன்ற தொகுதிகளை எளிதாக வெல்லமுடியும் என்றும் லிம் தெரிவித்தார்.