Home உலகம் கோத்தாபாயா தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பலாம்

கோத்தாபாயா தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பலாம்

996
0
SHARE
Ad
கோத்தாபாய ராஜபக்சே

பாங்காக் : தற்போது தாய்லாந்தில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் இலங்கை திரும்பியதும் அவருக்கு போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கையின் ஆளும் கட்சி நடப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் குறிப்பிட்டன.

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) தாய்லாந்து தலைநகர் வந்தடைந்தார்.

#TamilSchoolmychoice

இலங்கையிலிருந்து மக்கள் போராட்டத்தினால் தப்பியோடிய கோத்தாபாய  ராஜபக்ச தென்கிழக்காசியாவில் தஞ்சமடைந்திருக்கும் இரண்டாவது நாடு தாய்லாந்து ஆகும்.

சிங்கப்பூரிலிருந்து, தனியார் வாடகை விமானம் ஒன்றில் கோத்தாபாய  ராஜபக்ச பாங்காக்கின் டோன் முவாங் விமான  நிலையம் வந்தடைந்தார்.

தாய்லாந்தில் அவர் தங்கியிருக்கும் வேளையில் தங்கும் விடுதியிலிருந்து வெளியே வரக் கூடாது என தாய்லாந்து அரசாங்கம் அவருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாபாய  ராஜபக்சவை அனுமதித்த தாய்லாந்து

பொருளாதார சரிவைத் தொடர்ந்து ஜூலை மாதம் நடந்த மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு கோத்தாபாய ராஜபக்சே நாட்டை விட்டு மாலைத் தீவுகளின் வழியாக சிங்கப்பூருக்கு ஜூலை 14-ஆம் தேதி தப்பிச் சென்றார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் அதிகாரத்துவ இல்லம் மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டதை அடுத்து, ஜூலை மாதம் ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜூலை 14 அன்று மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற ராஜபக்ச தென்கிழக்கு ஆசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இரண்டாவது நாடு தாய்லாந்து ஆகும். அவர் அரச தந்திர கடவுச் சீட்டை (Diplomatic Passport) பெற்றிருப்பதால் அந்த நாட்டில் அவர் 90 நாட்கள் வரை தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார்.