தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சாலே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மொத்தமுள்ள 45 தொகுதிகளில் இதுவரையில் பெரிக்காத்தான்-பாஸ் கூட்டணி 39 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
கிளந்தான் மாநிலத்தில் நடப்பு மந்திரி பெசார் டத்தோ அகமட் யாக்கோப், துணை மந்திரி பெசார் மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமட் யாக்கோப் மாற்றப்படவில்லை – மாறாக அவரே மீண்டும் மந்திரி பெசாராகத் தொடர விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. கிளந்தான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் யார் என்ற ஆரூடங்கள் எழத் தொடங்கியுள்ளன.