Home நாடு சரவணன் தலைமையில் பங்சார் எ.அண்ணாமலையின் நூல் வெளியீடு கண்டது

சரவணன் தலைமையில் பங்சார் எ.அண்ணாமலையின் நூல் வெளியீடு கண்டது

276
0
SHARE
Ad
பங்சார் எ.அண்ணாமலையுடன் சரவணன்…

கோலாலம்பூர் : மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமின்றி தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு நம மலேசிய இலக்கிய உலகின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை வழங்கி வருபவர் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.

அந்த வரிசையில் பங்சார் எ.அண்ணாமலையின் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு நூலைக் கடந்த வியாழக்கிழமை ஜூலை 2-ஆம் தேதி மாலை டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் சரவணன் வெளியிட்டார்.

“நம் நாட்டின் இலக்கிய உலகில் எழுத்தும் படைப்பும், ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ நடைபெற்று வருவதைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ச்சியான நூல் வெளியீட்டு விழாக்களைக் காண்பது மனதிற்கு இதமளிக்கிறது. பங்சார் எ.அண்ணாமலையின் கவிதை நூல் வெளியீட்டு விழாவைத் தலைமையேற்று வெளியீடு செய்தேன். கவிதை என்பது ஒரு தனி மொழி. அந்த மொழிக்கு நிறைய சக்தி உண்டு. என்றோ படித்த வரிகள் இன்றும் மனதில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அந்த மொழியும், கவிதை நடையுமே” என தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார் சரவணன். கீழ்க்காணும் பாரதியார் கவிதையையும் சரவணன் மேற்கோள் காட்டினார்:

“சுவை புதிது, நயம் புதிது

வளம் புதிது சொற் புதிது
ஜோதி கொண்ட நவ கவிதை
எந்நாளும் அழியா மஹா கவிதை”