Home கலை உலகம் படப்பிடிப்பில் நெருக்கம்: ஜெய், நஸ்ரியா காதல்?

படப்பிடிப்பில் நெருக்கம்: ஜெய், நஸ்ரியா காதல்?

593
0
SHARE
Ad

ஜூலை 4-ஜெய்க்கும் நஸ்ரியா நசீமுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. ஏற்கனவே அஞ்சலியுடன் ஜெய் இணைத்து பேசப்பட்டார்.

இருவரும் எங்கேயும் எப்போதும் படத்தில் சேர்ந்து நடித்தனர். ஜெய்யுடன் காதல் இல்லை என்றும் இனிமேல் அவருடன் சேர்ந்து படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், அஞ்சலி ஆவேசமாக மறுப்பு வெளியிட்டார்.

1361881969-bd9k5idcyaaw4u3 இந்த நிலையில் தற்போது நஸ்ரியாவுடன் ஜெய் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார். நஸ்ரியா நசிம் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் வெளியான நேரம் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் பிரபலமானார்.

#TamilSchoolmychoice

தற்போது ஜெய் ஜோடியாக ‘திருமணம் எனும் நிக்கா’, தனுஷ் ஜோடியாக நையாண்டி படங்களில் நடித்து வருகிறார்.

திருமணம் எனும் நிக்கா படப்பிடிப்பில் ஜெய்க்கும் நஸ்ரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் பிறகு அது காதலாக மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் செய்தி பரவியுள்ளது.

தனுசுடன் நையாண்டி படத்தில் நஸ்ரியா நடித்துக் கொண்டு இருக்கும் போது அங்கேயும் ஜெய் போய் வருகிறாராம். கேரவேனில் நஸ்ரியாவுடன் தனிமையில் பல மணி நேரம் பேசிக் கொண்டு இருப்பதாக நையாண்டி படக்குழுவினர் எரிச்சல்படுகிறார்கள். படப்பிடிப்புக்கு இடையூறு செய்வதாக தனுசும் கோபமாக இருப்பதாக கூறுகிறார்கள்.