Home நாடு தர்மேந்திரன் கொலை: தலைமறைவாக இருந்த நாலாவது அதிகாரி காவல்துறையில் சரண்!

தர்மேந்திரன் கொலை: தலைமறைவாக இருந்த நாலாவது அதிகாரி காவல்துறையில் சரண்!

544
0
SHARE
Ad

hareகோலாலம்பூர், ஜூலை 29 – தர்மேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த அந்த நாலாவது காவல்துறை அதிகாரி ஹரே கிருஷ்ணா இன்று காலை காவல்துறையில் சரணடைந்தார்.

புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் சரணடைந்த அவரை, டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவர் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரணடைவதற்கு முன்பாக, ஹரே கிருஷ்ணா தனது குடும்பத்திற்கு தெரிவித்த தகவலில், தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…