Home நாடு சின் பெங்கின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வர அனுமதியுங்கள் – கர்பால் சிங் கருத்து

சின் பெங்கின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வர அனுமதியுங்கள் – கர்பால் சிங் கருத்து

554
0
SHARE
Ad

1-chin-pengகோலாலம்பூர், செப் 17 – மறைந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் உடலை அவர் பிறந்த நாடான மலேசியாவிற்குக் கொண்டுவர அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரான கர்பால் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அரசாங்கம் செய்யவில்லை என்றால் சர்வதேச ஒப்பந்தங்களில் மலேசியாவிற்கு நற்பெயர் கிடைக்காது என்றும் கர்பால் சிங் கூறியுள்ளார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு மலேசியாவுடன், மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தாய்லாந்து அரசாங்கத்திற்கிடையே ஹாட்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டதை கர்பால் சிங் நினைவுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“அந்த ஒப்பந்தத்திற்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது அரசாங்கத்திற்கு நல்லது இல்லை. சின் பெங்கைத் தவிர மற்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மலேசியாவிற்கு ஏற்கனவே திரும்பிவிட்டார்கள்” என்றும் கர்பால் தெரிவித்தார்.

இதனிடையே, “பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி ஆகியோர் சின் பெங்கின் குடியுரிமை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால் சின் பெங் மலேசியாவில் பிறந்ததற்கான சான்றிதழ் வைத்திருந்தார். அவர் தனது குடியுரிமையை மாற்றிக்கொள்ளவில்லை” என்று கர்பால் சிங் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மலேசியாவிற்குள் பலமுறை நுழைவதற்கான அனுமதி கேட்டு சின் பெங் விண்ணப்பித்திருந்தார் என்றும், ஆனால் அவை நிராகரிக்கப்பட்டன என்றும் கர்பால் சிங் கூறியுள்ளார்.