Home நாடு பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து

பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து

700
0
SHARE
Ad

mahathir-forehead1கோலாலம்பூர், நவ 11 – இணையத்தளங்களில் ஆபாச காணொளிகள், சர்ச்சைக்குரிய செய்திகள், அவதூறுகள் என பலர் அதைத் தவறான வழிகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் அதை தணிக்கை செய்ய வேண்டிய கட்டாய நிலை வந்துவிட்டதாக நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்தார்.

தெனாகா நேஷ்னல் பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மகாதீர், அன்றைய காலங்களில் இளையோர், குழந்தைகள் பாலியல் தொடர்பான படங்கள் மற்றும் காணொளிகளை எங்கும் காண இயலாது என்றும், அது போன்ற ஆபாச படங்கள் அந்நியப் பத்திரிக்கைகளில் மட்டுமே பிரசுரமாகும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இன்றைய நாட்களில் இணையத்தளங்களில் எங்கும் அது போன்ற ஆபாச படங்களைக் காணலாம் என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், தற்போது தணிக்கை செய்யப்படாமல் இது போன்ற பாலுணர்வைத் தூண்டும் படங்களும், காணொளிகளும் இணைத்தளங்களில் மிக சாதாரணமாக உலாவுவதால், குழந்தைகளும், இளையோரும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

இதனால் நாட்டில் பாலியல் வன்முறைகள், கற்பழிப்பு, குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும், வன்முறை தொடர்பான காட்சிகளால் கொலை, கொள்ளை ஆகியவையும் பெருகியிருப்பதாகவும் மகாதீர் தெரிவித்தார்.