Home இந்தியா உள்துறை அமைச்சர் அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி போராட்டம்!

உள்துறை அமைச்சர் அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி போராட்டம்!

564
0
SHARE
Ad

arvind-kejriwal-டில்லி, ஜன 20 – கூடுதல் பாதுகாப்பு என்று மத்திய அரசுடன் சேர்ந்து டெல்லி போலீஸ் கபட நாடகம் ஆடுகிறது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறையில் இருக்கும் இந்தியன் முஜாகிதின் தீவிரவாத இயக்க தலைவர் யாசின்பட்கலை விடுவிக்கும் நோக்கில் கெஜ்ரிவால் கடத்தபட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதனை அடுத்து அவருக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க டெல்லி போலீஸ் முடிவு செய்தது. இதனை ஏற்க மறுத்த கெஜ்ரிவால் டெல்லி போலீஸ் மத்திய அரசின் கைபாவையாக செயல்பட்டு பாதுகாப்பு என்ற பெயரில் நாடகமாடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதே வெளியில் சொல்ல வேண்டாம் என தம்மிடம் கேட்டுகொண்ட போலீசார் அவர்களாகவே வெளியிட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதனால் இந்திய முஜாகிதின் பெயரில் தமக்கு வேறு நபர்கள் ஆபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். இதை மறுத்துள்ள டெல்லி போலீஸ் ஆணையர் தங்கள் சட்டப்படி செயல்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் அலுவலகம் முன்பு திட்டமிட்டபடி தர்ணா இன்று நடைபெறும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மாநில அமைச்சர்களின் உத்தரவை மதிக்காமல் அவர்கள் மீதே வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் நடக்கும் குற்ற செயல்களை தடுக்க காவல் துறை தவறிவிட்டதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனை அடுத்து டில்லி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடபட்டுள்ளது. தடையை மீறி கெஜ்ரிவால் தலைமையில் தர்ணா நடந்தால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது.