காஜாங் சிறையில் உடல் நலக்குறைவால் அவதிப்படும் உதயகுமார்!

    588
    0
    SHARE
    Ad

    uthayakumarபெட்டாலிங் ஜெயா, ஜன 27 – தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    தனக்கு உடல் முழுவதும் சிரங்கு மற்றும் தோல் வியாதி ஏற்பட்டுள்ளதாகவும் உதயகுமார் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக பிரீ மலேசியா டுடே தகவல் தெரிவித்துள்ளது. அக்கடிதத்தின் நகலை உள்துறை அமைச்சிற்கும் அனுப்பியுள்ளார்.

    மேலும் தான் குளிப்பதற்கு வசதியில்லாத சிறையில் அறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் குழாய் நீர் கிடைப்பதில்லை என்றும் உதயகுமார் புகார் கூறியுள்ளார்.

    #TamilSchoolmychoice

    இப்பிரச்சனையை உடனடியாக அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்றும் உதயகுமாரின் மனைவி இந்திரா கெட்டுக்கொண்டுள்ளார்.