Home நாடு பாலிங்கியானில் தகுதி வாய்ந்த தே.மு வேட்பாளரை தேர்ந்தெடுப்போம் – நஜிப் உறுதி

பாலிங்கியானில் தகுதி வாய்ந்த தே.மு வேட்பாளரை தேர்ந்தெடுப்போம் – நஜிப் உறுதி

568
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், மார்ச் 1 – பாலிங்கியான் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தகுதி வாய்ந்த வேட்பாளரை நிறுத்த தேசிய முன்னணி தயாராக இருப்பதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.

இது குறித்து நஜிப் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். பிபிபி கட்சி மற்றும் சரவாக் தேசிய முன்னணி ஆகியவை தகுதி வாய்ந்த வேட்பாளரை அந்த தொகுதியில் நிறுத்தும்” என்று தெரிவித்தார்.

நஜிப்பின் இந்த அறிவிப்பின் போது, துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், தேசிய முன்னணி பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் மற்றும் உறுப்புக் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

#TamilSchoolmychoice

சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட் பதவி விலகி, அம்மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார். எனவே அவரது தொகுதியான பாலிங்கியானில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அப்துல் தாயிப்பிற்கு பதிலாக அவரது சிறப்புப் பிரிவு அமைச்சர், டான்ஸ்ரீ அடினான் சாத்தேம் அம்மாநிலத்தில் 5 ஆவது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.