Home இந்தியா நீலகிரியில் பாஜக போட்டியிட முடியாது – வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி!

நீலகிரியில் பாஜக போட்டியிட முடியாது – வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி!

461
0
SHARE
Ad

07-nilgiri-gurumoorthy-bjp-600-jpgஊட்டி, ஏப்ரல் 8 – நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தியின் வேட்பு மனுவும் மாற்று வேட்பாளரின் மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.

நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தியும், மாற்று வேட்பாளராக அன்பரசும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுவை இன்று பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கடிதம் தாமதமாக தந்ததால் இருவரின் மனுவைவும் தள்ளுபடி செய்தார்.

இதனால், நீலகிரி தொகுதியில் பாஜக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தக் கட்சி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் மணிரத்தினம் மனு தள்ளுபடி செய்யப்பட்டு மாற்று வேட்பாளரான அவரது மனைவியின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.