Home நாடு இரு விமான பேரிடர்கள்: மலேசிய சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவை சந்திக்கக்கூடும்!

இரு விமான பேரிடர்கள்: மலேசிய சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவை சந்திக்கக்கூடும்!

553
0
SHARE
Ad

visit-malaysia-2014கோலாலம்பூர்,ஜூலை 23 – கடந்த நான்கு மாதங்களில் மலேசிய விமானத் துறையில் ஏற்பட்ட இரு பேரிடரர்களால் மலேசியா சுற்றுலா துறை பெரும் பாதிப்பை அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370, கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு சீனாவின் பெய்ஜிங் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது மாயமானது. அவ்விமானம் இந்தியப் பெருங்கடலில் இறுதியாக விழுந்து நொறுங்கியதாக நம்பப்பட்டது. அனைத்துலக தேடுதல் வேட்டை நடத்தியும் இன்று வரை விமானத்தின் ஒரு சிறிய பாகம் கூட கிடைக்கவில்லை.

மலேசியா இன்னும் அதிலிருந்தே மீண்டு வராத நிலையில், அடுத்த பேரிடரான எம்எச்17 விமானம் உக்ரைன் எல்லையில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. மலேசிய விமானங்களுக்கு  ஏற்பட்ட இந்த இரு பேரிடர்களால் மலேசிய சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் மாதம் 239 பயணிகளுடன் காணாமல் போன எம்எச் 370 விமானத்தில் அதிக அளவிலான பயணிகள், சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால், மலேசியாவிற்கு வரும் சீன சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.

மேலும், எம்எச்370 பேரிடரை, மலேசிய அரசாங்கம் அனுகிய விதம் உலகளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதை நிவர்த்தி செய்ய மலேசிய அரசாங்கம் கடும் முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் வேளையில், எம்எச்17 விமானத்தின் பேரிடர் மலேசியா நாட்டின் சுற்றுலாத் துறைக்கு இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013 -ம் ஆண்டில் மலேசியாவால் 25 மில்லியன் சுற்றுப்பயணிகளை மட்டுமே பெற முடிந்தது. மேலும் கடந்த ஆண்டில் சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டியுள்ள மொத்த வருவாய் 65 பில்லியன் ரிங்கிட் ஆகும்.

இந்நிலையில், மலேசிய அரசாங்கம் இவ்வாண்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 28 மில்லியனாகவும், மொத்த வருவாய் 76 பில்லியன் ரிங்கிடாகவும் உயர்த்த வேண்டும் என்ற இலக்கோடு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.