Home அரசியல் பிரதமரை சந்திக்க ஹிண்ட்ராஃப் முடிவு!

பிரதமரை சந்திக்க ஹிண்ட்ராஃப் முடிவு!

524
0
SHARE
Ad

hindrafffகோலாலம்பூர், பிப்.25- பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்திப்பதற்கு ஹிண்ட்ராப் தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் வந்திருப்பது விவேகமான தீர்மானம் என்று மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தலைவர் டத்தோ நல்லா கே.எஸ்.தெரிவித்தார்.

எந்தவொரு விவகாரமாக இருந்தாலும், அல்லது பிரச்சனையாக இருந்தாலும் முறையான பேச்சு வார்த்தையின் மூலம் அதற்கான திர்வு காண முடியும்.

அதன் அடிப்படையில் தான் ஆரம்ப காலம் முதல், பிரதமருடன் ஹிண்ட்ராஃப்  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை தாமும் தமது கட்சியும் வலியுறுத்தி வந்துள்ளதாக டத்தோ நல்லா கூறினார்.

#TamilSchoolmychoice

“ஹிண்ராஃப் தனது செல்வாக்கை இன்னும் இழக்கவில்லை.  மலேசிய இந்தியர்களின் நலனுக்காக பாடுபடக்கூடிய ஓர் அமைப்பு என்பது அனைவரும்  அறிந்த ஒன்று. எனினும் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை அரசாங்கம் அகற்றியிருப்பதன் மூலம் அந்த அமைப்பின் செயல்பாடுகள், நோக்கத்தையும் தேசிய முன்னணி தலைவர்களும் உணர்ந்துள்ளனர்.

இதன் காரணமாகவே, ஹிண்ட்ராஃப் உட்பட இந்தியர்களை தளமாக கொண்டுள்ள அரசாங்க சார்பற்ற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ  முகமட் நஸ்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

தூய உள்ளத்துடன் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை ஹிண்ட்ராஃப்  தற்போது பயன்படுத்திக் கொள்ள காலம் வந்து விட்டது. எனவே, ஹிண்ட்ராஃப் எடுத்துள்ள முடிவானது விவேகமான முடிவகும்” என்று டத்தோ நல்லா தமது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.