Home இந்தியா கனிமொழி, ராசாவிற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு பதிவு!

கனிமொழி, ராசாவிற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு பதிவு!

802
0
SHARE
Ad

kanimozhi_rasa_001சென்னை, நவம்பர் 1 – திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா ஆகியோர் மீது மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்த போது சட்ட விரோதமாக தொலைதொடர்பு உரிமங்களை அளித்ததாகவும், இதனால் திமுக நடத்தும் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி லஞ்சமாக கிடைத்தது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக அமலாக்க பிரிவு இயக்குநரகம் கண்டறிந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இன்று இந்திய தண்டனை சட்டம் 120-பி (குற்றச்சதி) பிரிவு, அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டம் பிரிவு 4 உள்ளிட்டவற்றின் கீழ் இவர்கள் மூன்று பேர் மீது இந்த குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.