Home உலகம் ஜாம்பியா வனப்பகுதியில் 14 சிங்கங்களிடமிருந்து போராடித் தப்பித்த குட்டியானை! (காணொளியுடன்)

ஜாம்பியா வனப்பகுதியில் 14 சிங்கங்களிடமிருந்து போராடித் தப்பித்த குட்டியானை! (காணொளியுடன்)

655
0
SHARE
Ad

Untitledஜாம்பியா, நவம்பர் 14 – தென்னாப்பிரிக்காவின் ஜாம்பியா வனப்பகுதியில், குட்டி யானை ஒன்று, தன்னை வேட்டையாட வரும் 14 சிங்கங்களிடமிருந்து இருந்து போராடித் தப்பிய காட்சி, காண்போரை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

யூ டியூப் இணையத்தளம் வழியாக இந்த காணொளி பார்வையாளர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகின்றது. ஜாம்பியா வனப்பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள், குட்டி யானை ஒன்று 14 சிங்கங்களால் வேட்டையாடப்படுவதைப் படம்பிடித்து யூ டியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

அந்த காணொளியில், கோரப்பசியில் இருக்கும் 14 சிங்கங்கள், 1-வயது நிரம்பிய குட்டி யானையை சுற்றி வளைத்து தாக்குகின்றன. ஒரு சிங்கம், அந்த குட்டி யானையின் மீது ஏறி அதனை கடித்துக் குதறுகிறது.

#TamilSchoolmychoice

ஆரம்பத்தில் சிங்கங்களின் பசிக்கு குட்டி யானை இரையாகி விடுமோ என்று நாம் நினைக்கும் பொழுது, தீவிர போராட்டத்தை வெளிப்படுத்தி சிங்கங்களை அந்தக் குட்டி யானை விரட்டியடிக்கிறது.

Untitled.png,ஒரு சில நொடிகளில் சிங்கங்கள் குட்டியானையை துரத்தும் காட்சி மாறி, குட்டி யானை வீறு கொண்டு சிங்கங்களைத் துரத்த துவங்குகிறது.

வாழ்வா?சாவா? என்ற போராட்டத்தை உறைய வைக்கும் சூழலில் வெளிப்படுத்திய யானை குட்டிக்கு பார்வையாளர்கள் கிரேக்க வீரன் ஹெர்குலசின் பெயரை பட்டப் பெயராக சூட்டி கொண்டாடி வருகின்றனர்.

குட்டியானை தப்பிக்கும் காணொளியை கீழே காண்க: