Home உலகம் அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300 விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300 விமானங்கள் ரத்து!

555
0
SHARE
Ad

snow_14டல்லாஸ், பிப்ரவரி 25 – அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், 1300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று கடும் பனிப்புயல் வீசியது. இந்த புயலால் டல்லாஸ், தெற்கு ஒக்லகோமா, மேற்கு அர்கன்சாஸ் ஆகிய பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடும் பனிப்பொழிவு நிலவியதுடன், காற்றும் பலமாக வீசியது. வீடுகள் மற்றும் சாலைகளில் பனி உறைந்து காணப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

snow-6-720x480வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. கடும் குளிராலும், சாலை விபத்துக்களிலும் கடந்த சில நாட்களில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.  பனிப்புயலால் தல்லஸ் பன்னாட்டு விமான நிலையத்தில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 1300க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று காலை ரத்து செய்யப்பட்டன. கடும் பனிப்பொழிவால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது.கடும் குளிர் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

SNOW22_150202_DG_16x9_992பள்ளி கல்லூரி, அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. பனிப்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெக்சாஸ் மாகாணத்தின் வடக்கு பகுதிகளில் பனிபொழிவு இன்னும் சில தினங்களுக்கு தொடரும் எனவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.