Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியா 2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்துள்ளது!

மலேசியா 2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்துள்ளது!

630
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – மலேசிய ஊழியர்களிடம் போதிய ஆர்வம் இல்லாததால், நாட்டின் தொழில் துறை 2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்துள்ளது என்று மனித வள மேம்பாட்டின் இணை அமைச்சர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் தெரிவித்துள்ளார்.

Ismail Abdul Muthalibகடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை மொத்தம் 2.7 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் தற்காலிக பணி நியமனத்திற்கான விசா சலுகைகளை வைத்துள்ளதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இது தொடர்பான கேள்விகளுக்கு இஸ்மாயில் அப்துல் முத்தலிப் அண்மையில் கூறியதாவது:-

“உள்ளூர்வாசிகளிடம் மலேசிய தொழில்துறை வேலை வாய்ப்புகளில் போதிய ஆர்வமில்லை. ஒருவேளை அவர்கள் வாய்ப்பு பெற்றாலும், அவர்களின் சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எவ்வகையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், “உள்ளூர் வாசிகளின் தொழில் திறனை அதிகரிக்க ‘தேசிய இரட்டைப் பயிற்சி அமைப்பு’ (National Dual Training System) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. அதேபோல், பெட்ரோலிய துறைகளில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புகளை உள்ளூர் வாசிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 1518 நபர்களுக்கு, 14 பயிற்சி மையங்கள் மூலம் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

அனைவரும் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தாலும், மக்களின் ஆர்வத்தை பொறுத்தே வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.