Home நாடு ஜோகூரில் புதிய பொது விடுமுறை அறிவிப்பு!

ஜோகூரில் புதிய பொது விடுமுறை அறிவிப்பு!

567
0
SHARE
Ad

State-by-State-Johorஜோகூர் பாரு, மார்ச் 20 – சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டரின் முடிசூட்டு நாளை அனுசரிக்கும் விதமாக, இனி ஒவ்வொரு வருடமும் மார்ச் 23-ம் தேதி, ஜொகூரில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பொதுவிடுமுறை ஒவ்வொரு வருடமும் நவம்பர் 22-ம் தேதி, சுல்தான் இப்ராகிமின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த பொதுவிடுமுறைக்கு பதிலாக இருக்கும் என்று அம்மாநில செயலாளர் டத்தோ இஸ்மாயில் கரீம் அறிவித்துள்ளார்.

எனவே இனி நவம்பர் 22-ம் தேதி ஜோகூரில் பொதுவிடுமுறை இல்லை என்றும் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்மாயில் கரீம் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice