புத்ரஜெயா, ஏப்ரல் 6 – செமினி ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டி ஆய்விற்காக பிரிட்டன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறுகையில், “நம்மிடம் கறுப்புப் பெட்டியில் இருந்து தகவல்களை மீட்கும் வசதி இல்லை. எனவே கறுப்புப் பெட்டி ஆய்விற்காக பிரிட்டன் விமான விபத்து புலனாய்வு அமைப்பிற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகலாம்” என்று கூறியுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்து நடந்த செமினி பகுதியில் கறுப்புப் பெட்டி நேற்று காலை 11.30 மணிக்கு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.