Home கலை உலகம் நாளை 8-வது ஐ.பி.எல் துவக்கவிழா: ஹிருத்திக், அனுஷ்கா சர்மா நடனம்!

நாளை 8-வது ஐ.பி.எல் துவக்கவிழா: ஹிருத்திக், அனுஷ்கா சர்மா நடனம்!

688
0
SHARE
Ad

hiruthik_roshan_002கொல்கத்தா, ஏப்ரல் 6 – 8-வது ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் தொடக்கவிழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடனமாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனராம்.

8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 8-ஆம் தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.

போட்டிக்கு ஒரு நாள் முன்பாக அதாவது நாளை 7-ஆம் தேதி கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 8 அணிகளின் தலைவர்களும் மேடையில் தோன்றுவார்கள். விளையாட்டின் உத்வேகத்தை கடைபிடிக்கும் உறுதிமொழியையும் வழக்கம் போல் எடுத்துக் கொண்டு கையெழுத்திடுவார்கள்.

பின்னர் 8-வது ஐ.பி.எல். தொடங்குகிறது என்பதை குறிக்கும் வகையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர் கோப்பையை விழா மேடையில் வைப்பார்.

இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் தொடக்க விழாவில் பிரபலங்களின் கண்கவர் நடனம், கலை நிகழ்ச்சி, ஒளி வெள்ளத்தில் இசை விருந்து என்று மொத்தம் 2 மணி நேரம் நடைபெற உள்ளது.

இந்த கலைநிகழ்ச்சியை சோனி சிக்ஸ், சோனி மேக்ஸ் ஆகிய அலைவரிசையில் இதை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்த நிலையில் தொடக்க விழாவில் அசத்தப்போகும் கலைஞர்கள் யார்-யார் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் காதலியுமான அனுஷ்கா சர்மா, இந்த கலைநிகழ்ச்சியில் நடனமாடி அசத்த உள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், சாகித் கபூர், பர்ஹான் அக்தர் ஆகியோரும் நடனமாட உள்ளனர்.

நடனத்துடன், இசை அமைப்பாளர் பிரித்தமும் கைகோர்க்கிறார். பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். மேற்கண்ட தகவல்களை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகூர்,

“விழா தொடங்குவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பாக ரசிகர்கள் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தொடக்க விழாவிற்கான அனுமதிச் சீட்டுக்களை ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ரூ.200 முதல்) பெற்றுக் கொள்ளலாம். அல்லது காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அரங்கத்தில் வாங்கிக் கொள்ளலாம்’ என்றும் அவர் குறிப்பிட்டுளார்