கெய்ரோ, மார்ச்.5- மார்ச் இரண்டாம் வாரத்தில் எகிப்து அதிபர் முகமது முர்ஸி இந்தியா வர உள்ளார்.
எகிப்து வெளியுறவு அமைச்சர் ஹாதிம் சலே இந்திய தூதர் நவ்தீப் சூரியை, கெய்ரோவில் சந்தித்து பேசினார்.
அப்போது அதிபர் முர்ஸி, இம்மாதம் இரண்டாம் வாரம் இந்தியா வருகிறார். அவருடன் வர்த்தக குழுவினர் வருகின்றனர்.
இரு தரப்பு ஒத்துழைப்பு பல்வேறு துறைகளில் முதலீடுகள் குறித்து அதிபர் இந்தியாவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர் இந்திய தலைவர்களை சந்தித்து பேசுகிறார் என்றார்.
