Home இந்தியா ஜெயலலிதா வழக்கில் பவானிசிங்கை நீக்கக் கோரிய மனு இன்று விசாரணை!

ஜெயலலிதா வழக்கில் பவானிசிங்கை நீக்கக் கோரிய மனு இன்று விசாரணை!

446
0
SHARE
Ad

29-advocate-bhawani-singh1-600புதுடெல்லி, ஏப்ரல் 21 – சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் அதற்காக ஒரு தனி நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், மேல் முறையீட்டு வழக்கை நீதிபதி குமாரசாமி விசாரித்தார்.   அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜராகி வாதிட்டார். அப்போது, அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். வழக்கில் முடிவு எட்டப்படாததால் இந்த வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய குழுவிற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா.சி.பந்த் ஆகியோர் அடங்கிய குழு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பையடுத்துத்தான் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அமையும் என்று கர்நாடக நீதிமன்ற வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேல் முறையீட்டு தீர்ப்பு தேதியும் உச்ச நீதிமன்ற முடிவுக்காகவே காத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.