Home நாடு சிலுவை விவகாரம்: சட்டத்தை மீறியிருந்தால் பாகுபாடின்றி நடவடிக்கை – காலிட் திட்டவட்டம்

சிலுவை விவகாரம்: சட்டத்தை மீறியிருந்தால் பாகுபாடின்றி நடவடிக்கை – காலிட் திட்டவட்டம்

518
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 21 – தாமான் மேடானில் தேவாலயத்தில் இருந்த சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில், சட்டம் மீறப்பட்டிருந்தால், அது தன் சகோதரராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

khalid-abu-bakar-perhimpunan-8-mei

காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டத்தை மீறியிருப்பதாகத் தெரிந்தால், பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், தனது சகோதரர் அப்துல்லா அபு பக்கர் இந்த விவகாரத்தில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று முன்தினம் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்ற வைத்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காலிட் அபு பக்காரின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பக்கர் தலைமை வகித்தார் என நேற்று பல்வேறு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.