Home உலகம் நேபாள நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 876 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 876 ஆக உயர்வு!

729
0
SHARE
Ad

nep1காட்மாண்டு, ஏப்ரல் 25 –  நேபாளத்தில் இன்று காலை 7.8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 876 ஆக உயர்ந்துள்ளது. இதனை அந்நாட்டின உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது. இடிபாடுகளில் 1700-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக நேபாளத்தின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நாடு மிகப் பெரிய பேரிடரை சந்தித்துள்ளது. எங்களுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும். பலி எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

எவரஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு:

everestநேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் எவரஸ்ட் சிகரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட பனிச் சரிவில் 18 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.