Home இந்தியா குடிபோதையில் இருந்த ஏர்-இந்தியா விமானி சார்ஜாவில் கைது!

குடிபோதையில் இருந்த ஏர்-இந்தியா விமானி சார்ஜாவில் கைது!

497
0
SHARE
Ad

air-india-894685fசார்ஜா, மே 18 – ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் இருந்து டெல்லி வழியாக கொச்சிக்கு செல்ல ஏர் இந்தியா விமானம் 120 பயணிகளுடன் தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில், அந்த விமானத்தின் விமானி பாதுகாப்பு பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்த போது, அவரை பரிசோதித்த அதிகாரி விமானி மது குடித்து போதையில் இருப்பதை அறிந்தார்.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதை தொடர்ந்து அவரிடம் குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை கண்டறியும் மூச்சு பரிசோதனை நடந்தது. அதில் அவர் அதிக அளவு குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது.

#TamilSchoolmychoice

அதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்த தகவல் ஏர்  இந்தியா நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது. விமானியின் இந்த செயல், பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.