புதுடெல்லி, ஜூன் 17 – சுஷ்மா சுவராஜ் மீதான புகார் தொடர்பாக பா.ஜ.க, மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி ஆகியோர் இணைந்து இன்று பத்ரிகையாளர்களை சந்தித்தனர்.
சுஷ்மா மீது எவ்வித தவறும் இல்லை என தெரிவித்தனர். கிரிக்கெட் முறைகேட்டில் சிக்கிய லலித் மோடிக்கு குடியேற்றம் பெறுவது தொடர்பாக பிரிட்டிஷ் அரசிடம் அழுத்தம் கொடுத்ததாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி ஆகியோர் இணைந்து நிருபர்களிடம் பேசினர்.
இருவரும் நிருபர்களிடம் கூறுகையில்; “சுஷ்மா சுவராஜ் முறைப்படி செயல்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது”.
“எது சரியானதோ அதனையே சுஷ்மா செய்துள்ளார். பா.ஜ.க- வும் அரசும் சுஷ்மாவுக்கு ஆதரவாக உள்ளது. நல்லெண்ண அடிப்படையில் லலித்மோடிக்கு சுஷ்மா உதவியுள்ளார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என அருண்ஜெட்லியும், ராஜ்நாத்சிங்கும் கூறினார்கள்.