Home நாடு மலேசிய இந்தியத் தூதரக ஏற்பாட்டில் யோகா தினக் கொண்டாட்டம்!

மலேசிய இந்தியத் தூதரக ஏற்பாட்டில் யோகா தினக் கொண்டாட்டம்!

883
0
SHARE
Ad

yogaகோலாலம்பூர், ஜூன் 19 – கோலாலம்பூரில் அமைந்திருக்கும் மலேசிய இந்தியத் தூதரகம், முதல் உலக யோகா தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 21-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தலைநகர் ஜாலான் செராஸில் உள்ள கோலாலம்பூர் பூப்பந்து மைதானத்தில், யோகா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், இந்தியாவின் கலாச்சார அமைச்சின், இணை செயலாளர் ஸ்ரீ பிரமோத் குமார் ஜெயின் ஆகிய இருவரும் சிறப்பு விருந்திரனர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு ஜூன் 21-ம் தேதி, உலக யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததைத் தொடர்ந்து இந்நிகழ்வு உலக அளவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்