Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: பிணக்கிடங்கில் இடமில்லாததால், நியூயார்க்கில் இறந்தவர்கள் பூங்காவில் புதைக்கப்படுவர்!

கொவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக நியூயார்க்கில் மரணமுற்றவர்களின் எச்சங்கள் நியூயார்க் பொது பூங்காக்களில் புதைக்கப்படலாம்.

கொவிட்-19: கூச்சிங்- பாங்கி நிகழ்ச்சிகள் பெரிய அளவில் பாதித்துள்ளன!- சுகாதார அமைச்சு

கூச்சிங்கில் உள்ள ஒரு தேவாலய நிகழ்ச்சி, மற்றும் சிலாங்கூர் பாங்கியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட கொவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வியத்தகு அதிகரிப்புக்குள்ளாகி இருப்பதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மும்பை ஒரே மருத்துவமனையில் 26 தாதிகள், 3 மருத்துவர்களுக்கு கொவிட்-19 தொற்று

மும்பை – இந்தியா முழுவதும் இதுவரையில் 4,281 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கும் வேளையில் மரண எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக மும்பை வோக்ஹார்ட் (Wockhardt) மருத்துவமனையில் 26 தாதிகளுக்கும் 3 மருத்துவர்களுக்கும் ஒரே வாரத்திற்குள் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனை முழுவதும் மூடப்பட்டு, அங்கிருக்கும் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் கொவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் இரண்டு முறை சோதனைகள் நடத்தப்பட்டு அங்கு யாருக்கும் கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் வரை அந்த மருத்துவமனை மூடப்பட்டிருக்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில் புதுடில்லி நிசாமுடின் நிகழ்ச்சியில் தொடர்புடைய 25,500-க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.

கொவிட்-19 குறும்படத்திற்காக 29 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி – அமிதாப் பச்சன்

மும்பை – இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலும் அவரே “என்னைவிட இவர்தான் பெரியவர்” என மரியாதை வழங்கும் மற்றொரு உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன். அமிதாப் இந்திப் படவுலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த...

கொவிட்-19 பாதிப்பு இல்லை என சிங்கப்பூர் உத்தரவாதம் அளிக்காவிட்டால் மலேசியர்கள் நாடு...

சிங்கப்பூரில் பணி புரிபவர்கள் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளாகவில்லை எனும் உத்தரவாதத்தை, சிங்கப்பூர் அரசு வழங்காவிட்டால், அவர்களை நாட்டினுள் நுழைய அனுமதிக்கமுடியாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

அஸ்ட்ரோ: ஊழியருக்கு கொவிட்-19 பாதிப்பு- ஒளிபரப்பு மையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்!

அஸ்ட்ரோ தனது ஒளிபரப்பு மையத்தை ஏப்ரல் 7-ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது.

கொவிட்-19: நாட்டில் இன்று 236 பேர் குணமடைந்துள்ளனர்- 131 புதிய சம்பவங்கள் பதிவு!

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 6) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,793- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 131 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை...

பொருளாதார ஊக்கத் திட்டம்: கூடுதல் 10 பில்லியன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு வழங்கப்படும்!-...

கோலாலம்பூர்: நாட்டில் கொவிட்-19 பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான கூடுதல் பொருளாதார ஊக்கத் திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை அறிவித்தார். சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறை...

கொவிட்-19: நியூயார்க்கில் மலாயா புலிக்கு பாதிப்பு-மனிதனிடமிருந்து தொற்றிய முதல் சம்பவம்!

நியூயார்க்: நியூயார்க்கின் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் நான்கு வயது நடியா என்ற பெண் மலாயா புலி, கொவிட் -19 பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. மனிதனிடமிருந்து இவ்விலங்கிற்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது என்று அனைத்துலக ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை...

கொவிட்-19: சாத்தியமான சிகிச்சை முறையை பரிசோதிக்க மலேசியா தேர்வு!

கோலாலம்பூர்: கொவிட்-19- க்கான சாத்தியமான சிகிச்சையை பரிசோதிக்க உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டு ஆராய்ச்சியில் பங்கேற்க மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதாரம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்...