Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020
மலாக்கா: மந்திரி பெசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்!- அட்லி சஹாரி
புக்கிட் கட்டில் சட்டமன்ற உறுப்பினர் அட்லி சாஹாரி, செரி நெகெரி வளாகத்தின் முன் நடந்த கூட்டத்தில் நடத்தியபோது தாம் மலாக்கா மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
பேராக்கில் மீண்டும் அம்னோ தலைமையில் அரசாங்கம் – சரானி முகமட் புதிய மந்திரி பெசார்...
பேராக் மாநிலத்தின் அம்னோ தலைவரும் கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினருமான சரானி முகமட் பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்படலாம்.
நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகாதீர் மன்னிப்பு!
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கோலாலம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மலாக்காவில் ஜசெக- பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய அரசாங்கம் அமைகிறது!
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஜசெக மற்றும் பிகேஆரின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மலாக்கா மாநில அரசைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் பேராக்கில் தொடர வாய்ப்பில்லை – சிவநேசன் கூறுகிறார்
2018 மே மாதம் முதல் பேராக்கில் ஆட்சி அமைத்து செயல்பட்டு வரும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இனியும் தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என நடப்பு பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறியிருக்கிறார்.
மஇகாவின் அமைச்சரவை உறுப்பினர் யார்? மித்ரா மீண்டும் மஇகா கைவசமாகுமா?
டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் மஇகா இணையும் என்றும் தங்களின் பிரதிநிதிகளின் பட்டியலை கட்சி புதிய அரசாங்கத்தின் தலைமைத்துவத்திற்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மரினா மகாதீர், அம்பிகா சீனிவாசன் காவல் துறையால் விசாரிக்கப்படுகின்றனர்!
அம்பிகா சீனிவாசன் மற்றும் டத்தின் படுகா மரினா மகாதீர் இருவரும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஒரு கூட்டத்தில் ஈடுபட்டது தொடர்பில் காவல் துறையின் விசாரணையில் உள்ளனர்.
“மலேசியாவைக் காப்பாற்றுவோம்” – ஆர்ப்பாட்டங்கள் தொடரும்
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தில் புதிய அரசாங்கத்திற்கு எதிராகத் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் தங்களின் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டு கலைந்து சென்றனர்.
மீண்டும் போராட்டக் களத்தில் அம்பிகா! அவசர மக்களவைக் கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார்
“மலேசியாவைக் காப்பாற்றுவோம்” என்ற தலைப்பில் டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் அம்பிகாவும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட் மீண்டும் மகாதீர் அணிக்கு ஆதரவு
தன்னை ஆதரிக்கும் 114 மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை மகாதீர் வெளியிட்ட பின்னர், மகாதீரை ஆதரிக்கவில்லை என்று கூறிய சரவாக் ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட் மீண்டும அவரையே ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.