Tag: கொவிட்-19
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மக்கள் கீழ்ப்படிய மறுத்தால், இராணுவத்தின் சேவை பயன்படுத்தப்படும்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மக்கள் இன்னும் கீழ்ப்படிய மறுத்தால், காவல் துறையைத் தவிர, ஆயுதப்படையின் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறை ரோந்து நடவடிக்கையைத் தொடங்கியது!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி சிலாங்கூர் காவல் துறை பாரிய நடவடிக்கையைத் தொடங்கினார்கள்.
இந்தோனிசியா: 80-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கலந்து கொள்ள இருந்த மத நிகழ்ச்சி இரத்து!
ஜகார்த்தா: இந்தோனிசியாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள இருந்த இஸ்லாமிய நிகழ்ச்சியில் மலேசியர்களும் கலந்து கொள்வார்கள் என்று நம்பப்பட்டது.
ஆயினும், தற்போது அந்நிகழ்ச்சியை இரத்து செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமலாக்கப் பிரிவினர்...
கொவிட்-19 பாதிப்பு குறைக்கப்படாவிட்டால், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படும்!
கொவிட் -19 பாதிப்பு குறைக்கப்படாவிட்டால், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை.
கொவிட் 19 : இந்தியாவில் சிக்கிக் கொண்டவர்களை தனி விமானத்தில் மீட்க விக்னேஸ்வரன்-சரவணன்...
விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், சென்னையிலும், திருச்சியிலும் சிக்கிக் கொண்டுள்ள மலேசிய இந்தியர்களை தனி விமானம் மூலம் கோலாலம்பூருக்கு மீட்டு வர மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் உதவியோடு தான் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு 6 மாதம் வரை சிறை, அபராதம்!
தொற்று நோய்களைத் தடுப்பது தொடர்பான 2020 மத்திய அரசின் வர்த்தமானியை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இன்று புதன்கிழமை வெளியிட்டது.
பிடிபிடிஎன்: ஜூன் 30 வரை மாதாந்திர கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை!
கோலாலம்பூர்: தேசிய உயர்கல்வி கடன் நிதி கழகம் (பிடிபிடிஎன்) கொவிட் -19 பாதிப்பின் காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதாந்திர கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்துள்ளது.
"ஜூன் 30- ஆம் தேதி வரைக்கும் மூன்று...
“தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருங்கள்!”- தேசிய பாதுகாப்பு மன்றம்
அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து, இன்று புதன்கிழமை (மார்ச் 18) முதல் மார்ச் 31 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் எல்லா நேரங்களிலும் வீட்டில் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கொவிட்-19: யூரோ 2020 அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு!
யூரோ 2020 இந்த வருடம் நடைபெறாது எனவும், அடுத்த வருடம் யூரோ 2021-ஆக பெயர் மாற்றப்பட்டு நடைபெறும் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு விரைவில் தீர்வு!- விஸ்மா புத்ரா
தற்போது இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா ஒரு தீர்வைத் தேடும் என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார்.